June 25, 2018

இருள் கடிந்த திருக்காட்சி!

எனக்கு அயலவனாகிய ஒரு சகோதரன் உண்டு. அவன் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். ஆயினும் கடவுள் மீது அவனுக்குத் துளியும் நம்பிக்கை இல்லை. கோவிலுக்கும் செல்ல விரும்பவில்லை. தேவநற்கருணை அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல. […]
June 25, 2018

காலம் என்ற அரிய பொக்கிஷம்

ஒரு புதுவீடு கட்ட விரும்பினேன்; அப்போது மழைநீர் சேகரிப்புத் தொட்டி, சூரிய ஆற்றல் பயன்பாடு, உயிரி சமையல் எரிவாயு போன்றவற்றையும் திட்டமிட்டேன். ஒரு துளி மழைநீரைக் கூட வீணாக்காமல் அறுவடை செய்து குடிநீராகவும் குளிநீராகவும் பயன்படுத்தி […]
June 25, 2018

நல்லவரும் கெட்டவரும்

பாலைவனத்தில் வனவாசம் மேற்கொண்ட தந்தையரில் புனித மக்காறியோசும் ஒருவர். ஒருநாள் அவர் தமது ஆசிரமத்தை விட்டு வெளியே சென்றிருந்தார். திரும்பிவரும் போது ஒரு திருடன் ஆசிரமத்தில் திருடிய தட்டுமுட்டுச் சாமான்களைத் தனது கழுதையின் மீது ஏற்றக் […]
June 25, 2018

மினி சொன்ன பதில்

நினையாப் பொழுதில் ஒரு தொலைபேசி அழைப்பு. எதிர்முனைக்காரியைச் சட்டெனப் புரியவில்லை. இருப்பினும் பிறகு புரிந்தது அவள் மினி என்று. மினியுடன் ஏற்பட்ட பழக்கம் தற்செயலான ஒன்று. ஒரு பேருந்தில் பயணித்த போது ஏற்பட்ட பழக்கம் அது. […]
June 25, 2018

ஜெபமாலையுடன் விண்வீட்டை நோக்கி… அருளாளர் ஸ்ஃபறினோ கிமனஸ் மாலா

அந்தக் கோரக் காட்சியைக் காணும் மனத் துணிச்சல் கிமனசுக்கு இல்லாமற்போனது. எனினும் பார்பஸ்ட்றோ தெருவினூடே குருவானவர் ஒருவரை இழுத்துச் செல்லும் காட்சியைக் கண்டு அவர் வாளாவிருக்கவில்லை. அப்போது ஸ்பெயினில் உள்நாட்டுப்போர் மூண்ட காலம். அரசாங்கம் நடத்திய […]
June 25, 2018

மனு ரொம்ப கெட்டிக்காரன்

அன்று மனுவுக்கு ஒரே கோபம் கோபமாய் வந்தது. அதற்குக் காரணம் தீனா. அவள் மனுவை அடே முட்டாள் எனக் கூப்பிட்டாள். கூப்பிடுவதற்கும் ஒரு காரணம் இல்லாமல் இல்லை. வகுப்பாசிரியை மதிய உணவுக்கு முன்னுள்ள வகுப்பில் சொல்லிக் […]
June 20, 2018

சீயன்னாவுக்குச் செல்லும் பாதை

ஒருநாள் அசீசியின் புனித பிரான்சீசும் இன்னொருவரான சகோதரர் மாசியோவும் ஒரு வழியாய் நடந்து போய்க்கொண்டிருந்தனர். பிரான்சீசை விட மாசியோ சற்று வேகமாக நடந்தார். இருவரும் ஒரு நாற்சந்தியை அடைந்தனர். அது, சீயன்னா, பிளாரன்ஸ், அரீசோ ஆகிய […]
June 20, 2018

திருவிவிலியத்தில் தூசியா?

மேற்படிப்புக்காக ஓர் இளைஞன் வெளிநாடு செல்ல விரும்பினான். அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்துகொண்டிருந்த நாட்களில் அவனுடைய தாய் திருவிவிலியம் ஒன்றை அவனிடம் கொடுத்துக் கூறியது என்னவென்றால், “மகனே, மறக்காமல் இந்த நூலையும் உன்னோடு எடுத்துச் செல். இது […]
June 20, 2018

குறிக்கோள் இல்லாத ஓட்டங்கள்

உசைன் போல்டு என்னும் தடகள வீரர் உலகத்தின் வேகமான ஓட்டப்பந்தயக்காரர் என்னும் பெருமைக்கு உரியவர். மின்னல் வேகத்தில் ஓடும் திறன்பெற்ற அவர் ‘லைட்னிங் போல்டு’ என்றும் அறியப்பட்டிருந்தார். வெறும் 9.58 நொடியில் நூறு மீட்டர் தூரத்தைக் […]
June 20, 2018

வானம் கொணர்ந்த உணவுப் பொட்டலம்!

புனித பிரான்சீஸ் அசீசியார் எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் காட்டுக்குச் சென்று மாலை முதல் காலைவரைத் தனித்திருந்து ஜெபிப்பது வழக்கம். இதைப் பார்த்த இன்னொரு சகோதரர் அவரிடம், ‘சுவாமி, உம்மால் எப்படி அங்கே தனித்திருக்க முடிகிறது?’ எனக் […]
June 20, 2018

பாசமான இளநீர் குலைகள் !

கணவனின் முன்கோபத்தாலும் அடிக்கடி ஏற்படும் சண்டை சச்சரவுகளாலும் அவரை முழுமனதோடு அன்பு செய்ய முடியவில்லை என்ற ஆவலாதியுடன் ஓர் ஆற்றுநரிடம் (Councellor) வந்தாள் அப்பெண். அவளுடைய மனக்குறைகளை பொறுமையுடன் கேட்டறிந்த ஆற்றுநர் கூறியது: “அம்மா நாம் […]
June 20, 2018

தாய்க்கு மகனளித்த பரிசு

அன்றும் நான் வழக்கம்போல் மருத்துவமனைக்குச் சென்றேன். ஆறு நோயாளிகளுக்கு நான் மருத்துவப் பணிவிடை செய்ய வேண்டும். ஒவ்வொரு அறையிலும் நுழைந்து என்னை அறிமுகம் செய்தேன். ஆறாவது நோயாளியின் அறைக்குள் நுழைந்தேன். அங்கே 85 வயதான ஓர் […]