Articles

February 27, 2020

மாறக்கானாவில் நடந்த ஆனந்த நடனம்!

படுதோல்வி என்று எல்லாரும் சொன்னாலும் வெற்றிப்படியைத் தாண்டிச் சென்று ஆனந்த நடனம் செய்ய முடியும். சோர்ந்து போய் இருக்கிறவர்களைத் திடப்படுத்த வேண்டிய கடமை உனக்கு உண்டு. மாறக்கானாவைக் குறித்து நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது கால்பந்தாட்ட வீரர்களின் […]
February 27, 2020

பரிசுபெற வேண்டாவோ?

பரிசு பெறும் நோக்கில் குறிக்கோளை அடைவது எப்படி? எனது தாய் தந்தையரின் அனுமதியோடு நான் குருமடத்தின் படிக்கட்டுகளில் ஏறினேன். சில மாதங்களுக்குள் குடல்வால் அழற்சி (அப்பென்றிசைட்டிஸ்) என்னும் அரக்கன் எனக்குள்ளே நுழைந்தான். மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப அறுவை […]
February 27, 2020

ஒரு லாசரின் வாழ்க்கையில் இருந்து

நமக்குமுன் உள்ள லாசர்களைக் கண்டுபிடிக்கவும் உதவி செய்யவும் விரும்புகின்ற பணக்காரர்களாய் மாறுவதற்கான ஓர் அறைகூவல். சில வருடங்களுக்கு முன்னால் திடீரென ஒருநாள் எனக்கு நடப்பதற்கு முடியாமற் போயிற்று. மருத்துவப் பரிசோதனையில் பக்கவாதம் தொடர்பான ‘ஃபிரீசிங் கேட்’ […]
February 27, 2020

அவர் என்னையும் அழைப்பாரா?

இயேசு யாரையெல்லாம் அழைக்கிறார்? அழைக்கப் பெற்றவர்கள் செய்ய வேண்டியது என்ன? தொடர்ந்து படியுங்கள். இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், ‘சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க […]
February 27, 2020

இயேசு பாடையைத் தொட்டார்

அரண்களும் அழகும் வாய்ந்த செழிப்பான சிற்றூர்தான் நயீன் என்னும் ஊர். இயேசு அவ்வூரை நெருங்கிக் கொண்டிருந்தார். அவரோடு திரளான மக்களும் அவரைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். இயேசு தம் சீடர்களோடும் புதிதாகத் தம்மோடு சேர்ந்தவர்களோடும் பேசிக்கொண்டும் […]
November 26, 2019

உனக்காகவே காத்துக்கொண்டிருக்கிறார்

உள்ளன்போடு உங்களுக்காகவே காத்திருக்கும் ஒருவர் இருக்கிறார். நீங்கள் அவரிடம் சென்றால் அமைதி உங்களைத் தழுவும் என்பது திண்ணம்.   தேவ நற்கருணையில் கடவுளின் பிரசன்னம் இருக்கிறதா? வெறும் ஓர் உயிரற்ற அப்பத்துண்டில் உயிருள்ள கடவுள் உறைகிறார் […]
November 26, 2019

விதிர்க்க வைத்த ஐயவினா!

யாரேனும் நம்மிடம் இத்தகைய வினாவை எழுப்பியிருக்கிறார்களா? அப்படியானால் நாம் கிறிஸ்துவை நோக்கிய பாதையில் இருக்கிறோம். என்றாலும் கடக்க வேண்டிய தூரம் இனியும் இருக்கிறது.   கேள்வி கேட்பதும் விடை சொல்வதுமெல்லாம் மனித சகஜம். ஆனால் சில […]
November 26, 2019

அந்தப் புத்தகம் உங்களிடம் இருக்கிறதா?

இத்தகைய வினாக்களை எழுப்பவும் அதற்குப் பதில்தரவும் நம்மால் முடிந்தால் நாம் உண்மையான கிறிஸ்து சீடர்களாய் மாற முடியும்.   அன்று நகரமெல்லாம் ஒரே களபரம். எங்குமே விழாக்கோலம். பல சாலைகளிலும் வாகனங்களுக்குத் தடை. சற்றுநேரம் மவுனமாய் […]
November 25, 2019

இயேசுவின் கை வண்ணத்தாலான ‘சிக்கன்ஃப்றை’

ஆண்டவர் எவ்வளவோ நல்லவர் என்பதைச் சுவைத்தறிந்த ஓர் இரவின் அனுபவ நினைவுகள்.   2010 செவிலியர் படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக அலைந்து திரிந்த காலம். சவுதி நாட்டில் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிந்தேன். […]
November 25, 2019

விமான நிலையத்தில் பாவசங்கீர்த்தனக்கூண்டு

பகைவன் உறங்காமல் போர்க்களத்திலே நிற்கிறான். ஆனால் இறை ஊழியர்கள் களத்துமேட்டில் கண்ணயரக் கிடக்கின்றனர். அத்தகைய ஊழியர்களுக்கோர் எச்சரிக்கை.   ஷாலோம் திருவிழா நடைபெற்றது. அதில் உரையாற்றிய நான் மேடையை விட்டுக் கீழிறங்கி வந்தேன். அப்போது என் […]
November 25, 2019

பணிவின் பல வழிகள்

நமது அன்றாட வாழ்வில் பணிவென்னும் நற்பண்பினில் நம்மை நடத்தும் பொருட்டு தூய ஆவியார் நமக்காகக் காட்டும் நல்ல வழிகள்…   அது ஒரு மருத்துவமனை. நான் அங்கே மருத்துவரைப் பார்ப்பதற்காக வரிசையில் காத்திருந்தேன். அப்போது கழிவறைக்குப் […]
November 25, 2019

ஒன்றாம் வகுப்பு மாணவன் கேட்டது…!

சத்தீஸ்கட் மாநிலத்தில் உள்ள ஓர் உண்டுறைவிடப் பள்ளியில் 2004-ல் இது நிகழ்ந்தது. அங்கிருந்த நூற்றைம்பது மாணவர்களில் ஒருவன் தான் கத்தோலிக்கன். தளிர் முதல் +2 வரையிலான மாணவர்கள் அங்கே படித்து வந்தனர். பிறமதத்தவராயினும் கிறிஸ்தவ படிப்பினைகளை […]