Editorial

April 14, 2021

ஆர்ச்சு டீக்கனின் அறியாமை

ஐரோப்பாக் கண்டத்தின் ஒரு முக்கியமான திருத்தலம் நோக்கா. சுமார் பதினைந்து லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் ஒவ்வோராண்டும் வந்து செல்லக்கூடிய இத்திருத்தலம் 1870 -களில் வெறும் ஒரு வறண்ட பகுதியாகவே இருந்தது. ஆனால் இச்சிறு கிராமம் மளமளவென […]
February 27, 2020

நீங்கள் திருடப்பட்டவரா?

“திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை” (யோவா. 10 : 10). ஆன்மாக்களைத் திருடிச் செல்லும் சாத்தான் அவற்றைக் கொன்று அழிக்கவே முயல்கிறான். இதற்கான முதற்படியே திருடுதல். நம்முடைய வீட்டு அலமாரியில் வைத்திருக்கும் தங்கச் […]
November 26, 2019

பிரமாணிக்கமாய் இருப்போம்

அமெரிக்காவில் உள்நாட்டுக் கலகம் மூண்டெழுந்த காலம். போர்க்களத்தில் வில்லியம் ஸ்கோட் என்னும் படைவீரர் உறங்கிவிட்டார். விழிப்புடன் இருந்து காவல் தொழிலைச் செய்யவேண்டிய படைவீரர் உறங்கிவிட்டால் பகைவர் உள்ளே நுழைவது எளிது. ஒரு தனிநபரின் பொறுப்பற்ற தன்மையால் […]
November 23, 2019

சியன்னாவிலே ஓர் அன்பின் சங்கீதம்!

புனித சியன்னா கத்திரீனாளுடைய வாழ்க்கை வரலாற்றில் ஒரு நிகழ்ச்சி. அந்திரியா என்னும் பெயருடைய ஒரு சகோதரி மார்பகப் புற்றினால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானாள். அவளது மார்பகம் கிட்டத்தட்ட அழுகிய நிலையை அடைந்தது. இந்நிலையில் மூக்கைப் பொத்தாமல் […]
November 20, 2019

சாற்றோவின் இளவரசரும் சமாதானத்தின் இளவரசரும்

சாற்றோவின் இளவரசர் புனித பதுவை அந்தோணியாரை அணுகி அவரிடம், “சுவாமி, நான் ஒரு தேவ பக்தன்; நன்றாக ஜெபம் செய்பவன், முறை தவறாமல் உபவாசமிருப்பவன்; தானதர்மங்களைத் தாராளமாய்ச் செய்பவன்; ஒழுக்கம் தவறாமல் வாழ்பவன். இருப்பினும் ஏன் […]
March 25, 2019

மூடராவோரும் மூடராக்குவோரும்

நான் ஒரு வங்கியில் கிளை மேலாளராக வேலை பார்த்தவன். ஆனால் அந்த வேலையை உதறிவிட்டு ஒரு முழுநேர சுவிசேஷ ஊழியனாய் மாறி, கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன. வங்கி வேலையை இராஜினாமா செய்து கொண்ட நாள் […]
November 20, 2018

நாமும் நினிவேயிலிருந்து வெகு தூரத்தில் இல்லை

மிகவும் பழமையான அசீரியப் பேரரசின் தலைநகரம் நினிவே. திருவிவிலியத்தில் சுட்டப்படும் யோனா இறைவாக்கினரின் வாழ்க்கையோடும் வாக்கோடும் நெருங்கிய தொடர்புடைய பட்டணம் இது. இந்நகரம் ‘நினிவே மாநகரம்’ என்ற சொல்லாட்சியால் குறிக்கப்படுகிறது. இந்நகரத்தைக் கடந்துசெல்ல மூன்று தினங்கள் […]
June 26, 2018

தப்பிக்கப் பார்க்கிறீர்களா?

தேவ காருண்ணியத்தின் வேதபோதகி என அறியப்படும் புனித பவுஸ்தீனா ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தவர். மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்றவர். குடும்பத்தில் நிலவிய கொடிய வறுமையின் காரணத்தால் மேற்கொண்டு படிக்கமுடியவில்லை. இதனால் தமது […]
June 20, 2018

சீயன்னாவுக்குச் செல்லும் பாதை

ஒருநாள் அசீசியின் புனித பிரான்சீசும் இன்னொருவரான சகோதரர் மாசியோவும் ஒரு வழியாய் நடந்து போய்க்கொண்டிருந்தனர். பிரான்சீசை விட மாசியோ சற்று வேகமாக நடந்தார். இருவரும் ஒரு நாற்சந்தியை அடைந்தனர். அது, சீயன்னா, பிளாரன்ஸ், அரீசோ ஆகிய […]
May 3, 2018

கொடுக்கத் தவறிய ஒன்று

இந்த அந்நிய நாட்டில, எம் புள்ளைகளை வளக்கிறதுக்கு எத்தனூண்டு கஷ்டப்பட்டேன் தெரியுமா? ஊட்டுக்காரருக்கு வீட்டுமேல எந்த அக்கறையோ அங்கலாய்ப்போ இல்ல. இராப்பகலுண்ணு பாக்காம, கண்ணில வெண்ணைய வச்சிண்டு மாடா உழச்சு ஓடா தேஞ்சேன். புள்ளைங்க நன்னா […]
April 27, 2018

நானும்தான் அதிர்ஷ்டசாலி!

ஒருவன் இருந்தான். அவனுக்குத் திடீரென ஒருநாள் இருந்த வேலையும் பறிபோனது. மாற்றுவேலை தேடி ஊரெல்லாம் அலைந்தான். இறுதியில் ஒரு மிருககாட்சிச்சாலையை அடைந்து அங்குள்ள மேலதிகாரியைக் கண்டு அவரிடம் தனக்கு ஏதேனும் வேலைகிடைக்குமா என விசாரித்தான். அவர் […]
April 24, 2018

அங்கதமாயினும் இங்கிதம் காக்க !

புனித காமில்லஸ் தமது மருத்துவமனையின் தாழ்வாரங்களில் நடந்துகொண்டிருந்தார். அப்போது அங்கே தன்னுணர்வற்ற ஒரு மனிதன் தனது உடம்பில் ஒட்டுத்துணியும் இல்லாமல் ஏதோ சேட்டைகள் செய்து கொண்டிருந்தான். இதைப்பார்த்த மருத்துவமனை செவிலிப் பெண்கள் வாய்பொத்திக் கமுக்கமாய் சிரித்தனர். […]