என் கொழுந்தனாருடைய வீடு பால்காய்ச்சுக்காகச் சென்றிருந்தோம். எல்லா சடங்குகளும் முடிந்த பிறகு விடைபெற்றுத் திரும்பினோம். பொதுவாகவே நாங்கள் காரில் செல்லும்போது ஜெபமாலை சொல்வது வழக்கம். அன்றும் ஜெபமாலையைக் கையிலெடுத்து ஒரே ஒரு இரகசியம்தான் சொல்லியிருப்போம். அதற்குள் படாரென்ற ஒரு இடிசத்தம் கேட்டுத் திரும்பினோம். அதிர்ந்தே போனோம். பின்னால் வந்த வண்டி எங்கள் வாகனத்தை இடித்து விட்டது. பின்பக்கம் உருக்குலைந்து சின்னாபின்னமாகி விட்டது. இடியின் அதிர்ச்சியால் என் தலை முன்னால் இடித்து வீங்கியும் விட்டது. ஆனால் பின் சீட்டில் இரண்டு குழந்தைகள் உட்கார்ந்திருந்தன. அவர்களுக்கு என்னவாயிற்று என்ற அதிர்ச்சியில் சீக்கிரமே இறங்கிப் பார்த்தால் ஆச்சரியம். பின்னால் வைக்கப்பட்டிருந்த டயர் சிதைந்து குழந்தைகளுக்கு அரணாக நின்றது. அன்னை மாதாவின் அற்புத சக்தி எங்களைக் காத்தது.
-டாக்டர் றோஸ் அவ்சேப்.