கேரளத்திற்கு வெளியில் வேலை பார்க்கும் என் மகன் அந்த வேலை தொடர்பாக மூன்று நாள் வீட்டுக்கு வந்தான். பகல் முழுவதும் கம்பெனி… கம்பெனிக் காரியங்கள் என அலைந்தான். களைத்துப் புளித்து மாலை மயங்கும்போது வீட்டுக்கு வருவான். ஒரு நாள் இரவில் அவனோடு நேரம் செலவிடலாம் என எண்ணி அவன் அறைக்குச் சென்றேன். அங்கே அவன் ஏதேதோ எழுதிக் கொண்டிருந்தான். பிறகு நீண்ட நேரம் ஃபோணில் பேசிக்கொண்டிருந்தான். வீட்டில் வந்தாலும் இப்படி அரக்கப்பரக்க இருக்கிறாயே என கோபித்தேன்.
ஆனால் அவன் சொன்னான்: நான் இந்தக் கம்பெனியில் இருக்கும்வரை எங்கிருந்தாலும் எனது எல்லாப் பணிகளையும் பற்றிக் கம்பெனி எம்.டி அவர்களுக்கு செய்தி அனுப்ப வேண்டும். அதில் குறை ஏற்பட்டால் இந்த நல்ல கம்பெனி வேலையை நான் இழக்க நேரிடும்.
உடனே ஒரு மின்னல் வெட்டியது போல் என் உள்ளத்தில் ஒரு எண்ணம் பிறந்தது. இன்று இந்த நவீன உலகில் எம்.டி யுடன் தொடர்பு கொள்ள தொலைபேசி, மின்னஞ்சல், கட்செவி அஞ்சல் போன்றவை உதவுமாயின், இதைவிட எவ்வளவோ அதிகமாய் என் வானகத் தந்தையுடன் இறைவேண்டல் மூலம் தொடர்பு கொள்ள முடியும்!
தந்தைக் கடவுளின் கம்பெனியில் வேலை செய்வோம். அவரிடம் திரும்பிச் செல்லும்வரை இடைவிடாமல் அவருடன் தொடர்பில் இருப்போம்.
“இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்” (1தெச. 5:17).