முகநூலும் கட்செவி அஞ்சலும்

ஈரான்-ஈராக் போரில் பங்கேற்ற ஓர் அமெரிக்க இராணுவ வீரர் போர் முடிந்து அமைதி திரும்பிய போது தம் வீட்டுக்குப் புறப்பட்டார். வீட்டுக்குச் சென்றதும் தமது இருபத்து நான்கு வயது மட்டுமே ஆன இளம் மனைவிக்குப் புற்றுநோய் பாதித்திருக்கும் அவலச் செய்தியையே கேட்க நேர்ந்தது. உடனே அவர் தமது நூறு நண்பர்களின் முகநூல் மற்றும் கட்செவி அஞ்சல்களுக்குத் தகவல் தெரிவித்து ஜெபிக்கும்படிக் கூறினார். மேலும், இத்தகவலை தலா பத்து நண்பர்களுக்குப் பகிர்ந்து ஜெப உதவிகளைப் பரவலாகக் கோரினார். இவ்வாறு உலகத்தின் நானா பகுதிகளிலிருந்தும் கடவுள்பால் எழுப்பிய விண்ணப்பம் புற்றுநோயை முற்றாகப் பற்றறுக்க வைத்தது. இந்த இராணுவ வீரரையோ அவரது மனைவியையோ நேரடியாகப் பார்த்தறியாத பல்லாயிரக்கணக்கானவர்களின் பரந்துப்பட்ட பிரார்த்தனை விண்ணக வாசலைத் திறக்கும் திறவுகோலாய் மாறின. ஆகவே, கணியுகத்தில் இருக்கும் நாம் நவீன தொடர்புசாதனங்களை ஏன் இவ்வாறு பயனுள்ள காரியங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது? வெறும் அலகையின் பணிமனைகளாய் மாறிக்கொண்டிருக்கும் இவற்றை மடைமாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *