குரு மொழி

இளைஞன் குருவை அணுகி “தூய ஆவியைப் பெறவேண்டுமானால் பாவக்கறை படியாத வெள்ளை உள்ளத்துடன் இருக்க வேண்டும் என்கின்றனர். அதற்கு மனந்திரும்புதல் அவசியம். மனமாற்றத்தினால் தூய ஆவி அருளப்படுவார். அப்படியானால் எனக்கு தூய ஆவியார் அருளப்படமாட்டாரா?’ எனக்கேட்டான்.

குரு அவனை அன்பு மீதூரப் பார்த்தார். ‘மகனே, நான் உனக்கு ஒரு ஜெபத்தைக் கற்றுத் தருகிறேன்: “ஆண்டவராகிய இயேசுவே, என்மேல் இரக்கமாயிரும் உமது திரு இரத்தத்தால் என்னைக் கழுவி தூய்மையாக்கும். உமது தூய ஆவியைப் பொழிந்து உமது அன்பினால் என்னை நிரப்பும்”.

அவர் மீண்டும் அவனை நோக்கி, “மகனே, இயேசு நமக்காகத் தம் இரத்தத்தைச் சிந்தினார். அந்த செங்குருதியின் தகுதியால் நாம் நம் பாவங்களிலிருந்து விடுதலை அடைகிறோம். அவர் தமது தூய ஆவியை இந்நானிலம் பெறவேண்டுமென்றே இப்படிச் செய்தார். ஆதலால் நாம் அவரது துன்பப்பாடுகளால் சம்பாதித்தருளிய பாவமன்னிப்பை நம்பி அறிக்கையிட்டு ஒப்பற்ற பரிசிலாம் தூய ஆவியைப் பெற வேண்டும். இதைத்தான் இறைவன் விரும்புகிறார்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *