ஒரு சோதனை

என் வீட்டிலிருந்து நான் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு வெறும் மூன்று மணி நேர பயணதூரம்தான். இருப்பினும் வார இறுதியில்தான் நான் வீட்டுக்கு வருவது வழக்கம். ஒரு தடவை நான் வேலைக்குச் சென்ற முதல் நாளிலேயே பயங்கரமான பல்வலி என்னைச் சங்கடப்படுத்தியது. அப்போதெல்லாம் ‘பிணிவிடுப்பு’ என்பது இல்லை. பல்வலியும் பல நாட்கள் தொடர்வது உறுதி. ஆதலால் அன்றிரவு நான் வருந்திக்கொண்டிருந்தேன்.

காலையில் திருப்பலிக்காகப் பக்கத்து தேவாலயத்திற்குச் சென்றேன். அப்போது, ‘இயேசுவின் ஆடை விளிம்பை நம்பிக்கையோடு பரிசித்த இரத்தப்போக்குடைய பெண் நலம் பெற்றாளே; நானும் ஏன் இன்று சோதித்துப் பார்க்கக்கூடாது?’ என என் மனம் சொல்லியது. இதனால் அன்று நான் உட்கொண்ட நற்கருணையை என் வலிமிக்க பல் இடுக்கில் சற்று நேரம் அடக்கி வைத்தேன். பிறகு என் உள்ளத்தில் மெளனமாக, ‘ஐயனே, உம்மைத் தொட்ட எல்லாரும் நலம் பெற்றார்களே. இதோ நானும் உம்மைத் தொடுகிறேன். என்னைக் குணமாக்கும்’ என வேண்டிக்கொண்டேன்.

தங்குமிடம் திரும்பிய நான், நேரமான போது அலுவலகம் புறப்பட்டுச் சென்றேன். ஆனால் உண்மையில் நான் அந்த அற்புத சவுக்கியத்தை மறந்தே போனேன். வேதனை முழுக்க முழுக்க மாறியிருந்தது. அந்த அதிசயத்தை அசைபோட்டேன். இயேசுவுக்கு நன்றிகூறி மறுபடியும் வேலைக்குள் ஐக்கியமானேன். அப்பத்தில் வாழும் அன்பு நாதரை உளமார ஆராதித்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *