அன்பினால் கட்டிமுடித்த பாலம்

வாஷிங்டன் ரோபிளிங் என்னும் அப்பொறியாளர் மிகப்பெரும் விபத்தில் சிக்கி  அசைவற்றுக்கிடந்தார். இனி புரூக்லின் பாலம் என்னும் ஓர் உயரிய கனவை நனவாக்க முடியாதென்றே எல்லாரும் கருதினர். அவருடைய தந்தை அலக்சாண்டர் ரோபிளிங்கின் ஒரு பைத்தியக்காரக்கனவே இங்கிலாந்தில் உள்ள புரூக்லின் பாலம். ஆனால் அதைக் கட்டி முடிப்பதற்குள் அவர் இறந்து போனார். அவருடைய மகனும் விபத்தில் சிக்கிவிட்டார். ஒரு விரலை மட்டும் தான் மெல்ல அசைக்க முடிந்தது. எனினும் வாஷிங்டனால் தளர்ந்து விடும் எண்ணம் சிறிதும் இல்லை. அவரது மனைவியாகிய எமிலி அவருக்கு அன்பான பக்க பலமாக இருந்தார். அவர் தமது கணவருக்காக விஞ்ஞான தத்துவங்கள் கற்றார். தினந்தோறும் வேலைத்தளங்களைப் போய் சந்தித்தார். கணவனுடைய வழிகாட்டுதல்களைத் தொழிலாளர்களுக்கு உணர்த்தினார். அவர்களின் ஐயப்பாடுகளைக் கணவனிடம் பேசினார். தம் கணவர் படுத்த படுக்கையாயினும் அவரால் இவ்வேலையைச் செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கையைப் பணியாளர்களிடம் ஊட்டினார். இவ்வாறு நெடிய பதிமூன்றாண்டுகளின் கடின உழைப்பினால் 1883-ல் பாலப்பணிகள் அனைத்தும் முடிவுற்றன. அன்பினால் கட்டி எழுப்பிய பாலமாகவே அது இருந்தது.

“என் மனத்திற்குப் பிடித்தவை மூன்று அவை ஆண்டவர் முன்னும் மனிதர் முன்னும் அழகுள்ளவை. அவை உடன் பிறப்புகளிடையே காணும் ஒற்றுமை அடுத்திருப்பாரோடு ஏற்படும் நட்பு தங்களுக்குள் ஒன்றி வாழும் கணவன் மனைவியர்” (சீஞா25:1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *