எரியூட்டும் சுவாலைகள்

அந்த சுவிசேஷ ஊழியர் வெளியே செல்வதற்காகத் தம் வீட்டிலிருந்து இறங்கினார். அப்போது திடீரென ஒரு விற்பனைப் பிரதிநிதி சில பொருட்களுடன் தமது வீட்டு முற்றத்தில் நிற்பதைக் கண்டார். வாட்டசாட்டமான ஓர் இளைஞன். அவன் தன்னிடமிருந்த உற்பத்திப்பொருட்கள் சிலவற்றைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான். திக்காத சொற்களால் சரளமாகப் பேசிய பேச்சினால் கவரப்பட்ட அச்சுவிசேஷ ஊழியர் அப்பொருட்கள் தமக்கு உபயோகமானவை என எண்ணி அவற்றை வாங்கிக் கொண்டார். அதற்கான விலையை அவனிடம் கொடுக்குமுன் கேட்டார் : “தம்பி உனக்கு இயேசு கிறிஸ்துவைத் தெரியுமா? ஆம் தெரியுமே; நானும் ஒரு கிறிஸ்தவன் தான் என்றான் மறுமொழியாக.

அப்படியானால் நீ உனது கம்பெனியின் உற்பத்திப் பொருட்களை விற்கும் சொற்சாதுரியத்தை ஏன் சுவிசேஷ வளர்ச்சிக்காகச் செலவிடக் கூடாது?”
“ஆனால்…. எப்படி?”
“இன்று முதல் நீ உன் கம்பெனிக்காகச் செலவிடும் நேரம் தவிர்த்து ஒரு மணி நேரம் சுவிசேஷப் பணி செய்ய வேண்டும். நீ யாரைச் சந்திக்கிறாயோ அவர்களிடம் சூழலுக்கு ஏற்ற வகையில் மீட்பரான இயேசுவைப் பற்றி எடுத்துக்கூற வேண்டும்”.

அந்த சுவிசேஷ ஊழியரின் வார்த்தைகளால் கவரப்பட்ட அவ்விளைஞனின் கண்கள் விசாலமாயின. தனக்குக் கிடைத்த சிறந்ததோர் பணியை எண்ணி மிகுந்த பெருமையுடன் முன்னோக்கி நடந்தான். உறுதியான சுவடுகளுடன்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *