நீரில் அணையாத தூய நெருப்பு

ஸ்பெயின் நாட்டிலுள்ள கிரானடா என்னுமிடத்தில் ஏழைகளுக்கு உதவும் இன்னொரு ஏழை மனிதர் இருந்தார். அவர் பெயர் ஜாண். உஞ்சவிருத்தியின் மூலம் பெற்ற உணவு, உடை போன்றவற்றை ஏழைகளுக்கு வழங்குவதிலே அவர் மனநிறைவு கொண்டார். ஆனால் அந்த ஏழை மனிதரின் செயல் பலருக்கும் பிடிக்கவில்லை. ஒரு நாள் அவ்வூரில் உள்ள சிலர் ஜாண் உஞ்சவிருத்தி மேற்கொண்டிருந்த இடத்திற்குச் சென்றனர். அவர்களில் ஒருவன் பக்கத்து அருவியிலிருந்து தண்ணீர் மொண்டு ஜாணின் தலையிலே ஊற்றிவிட்டான். அது ஒரு குளிர்காலம். ஜில்லென்ற குளிர்ந்த நீர் ஜாணின் உடல்பூராவையும் நனைத்தது. சுற்றிலும் நின்றவர்கள் மெளனமாயினர். ஆனால் ஜாண், அந்த இளைஞனிடம் மன்னிப்புக் கேட்டு விட்டு, நனைந்த உடைகளுடன் உஞ்சவிருத்தியைத் தொடர்ந்தார். இந்த ஜாண் தான் கடவுளின் புனித ஜாண் எனக் கத்தோலிக்கத் திருச்சபையால் வணங்கப்படுகிறார்.

“எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களையும் மன்னியும்” (மத் 6:12).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *