புதிய மனிதராய் மாறிட…

அப்பெண் கண்ணீரும் கம்பலையுமாக அவரருகே அமர்ந்திருந்தாள். “நான் நான்கு முறை கருச்சிதைவு செய்த மாபெரும் பாவி. கடவுள் இவ்வுலகிற்கு பெருங்கொடைகளாய் வழங்கவிருந்த குழந்தைகளாக இருக்கலாம் அவர்கள். ஆனால் நான் என் கருவறையிலேயே அவற்றின் கருவறுத்துவிட்டேன். என்னைக் கடவுள் மன்னிப்பாரா? எவ்வளவுதான் பாவசங்கீர்த்தனம் செய்தாலும் கடவுள் மன்னிப்பாரா என்ற சந்தேகம் எனக்குள்ளே வலுக்கிறது”.

அவர் அவளுக்கு மறுமொழியாக, “அம்மா, கடவுள் உன்னை ஒரு பாவியாகப் பார்க்கவே இல்லை. அவர் உன் பாவங்களை மன்னித்ததுமல்லாமல் அவற்றை என்றென்றைக்குமாய் மறக்கவும் செய்திருக்கிறார். மகனாகிய இயேசு நம்மைத் தம் தந்தையின் அருகிலே நிறுத்தி, “இதோ என் இரத்தத்தால் நான் கழுவித் தூய்மையாக்கிய என் அன்பு மகன் அல்லது மகள் என்பார்”.

“எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும் போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ” (2கொரி 5:17).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *