அன்பின் அர்த்தங்கள் யாவை?

அன்பு என்றால் என்ன? என்ற கேள்வியை இரண்டாம் வகுப்பு மாணவர்களிடம் தொடுத்தார் ஆசிரியர். ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு பதில் இருந்தது.

“எங்கள் ஆச்சி ஒரு வாத நோயாளி. அவர்களால் குனிந்து கால்விரல்களின் நகங்களை வெட்ட முடியாது. தாத்தாவுக்குக் கண் தெரியாவிடினும் ஆச்சியின் கால் நகங்களை தடவித்தடவி வெட்டிக் கொடுப்பார். இது தான் அன்பு” – ஜீஸா

“ஒரு விபத்தில் சிக்கிய என் அப்பா படுக்கையிலாகி சில வாரங்கள் ஆகிவிட்டன. அவருக்கு எவ்வளவுதான் வேதனையென்றாலும் என்னைப் பார்க்கும் போது சிரித்து விடுகிறார்” – மனு.

“அப்பாவுக்குத் தேநீர் கொடுக்குமுன் இனிப்புச் சரியாக இருக்கிறதா என அறிய, அம்மா கரண்டியில் கொஞ்சம் எடுத்து நாவில் விட்டு ருசிப்பார். ஆனால் மற்று யாருக்கும் இப்படிச் செய்வதில்லை. இதுவே அன்பு” – லைலா.

“கடந்த பள்ளி ஆண்டுவிழாவில் மேடையில் ஏறியபோது எனக்கு ஒரே பயம். ஆனால் அப்பாவின் மடியில் இருந்துகொண்டு என் தம்பி என்னை நோக்கிப் புன்னகைத்தான்” – ஹெலேனா.

“கோழிக் கறி சமைக்கும் போது மிக நல்ல துண்டுகளைத்தான் அப்பாவுக்கு அம்மா பரிமாறுவார்” – ஜெனி.
“நான் உறங்கும்போதும் அம்மா எனக்கு உம்மம் (முத்தம்) தருவாள்” – அலக்சாண்டர்.

“நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும். பிறரிடத்தில் அன்பு கூர்பவர் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர் ஆவார்” (உரோ 13:8).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *