இல்லறம் மட்டுமே நல்லறமா?

திருமண வாழ்வுக்குத்தான் எல்லாரும் அழைக்கப்படுகிறார்களா என்றால் நிச்சயம் இல்லை. தனியாக வாழ்பவர்களின் வாழ்க்கையும் முழுமையான ஒரு வாழ்க்கைதான். இவர்களுக்காகக் கிறிஸ்து ஒரு தனிப்பட்ட நெறியை வகுத்தளித்துள்ளார். இவர்கள் விண்ணரசின் பொருட்டு மணம்புரியாமல் வாழ அழைக்கப்பட்டிருக்கிறார்கள் (மத் 19:12).

தனித்து வாழ்பவர்கள் பெரும்பாலும் தனிமையில் வாடுவது உண்டு. இப்படிப்பட்டவர்கள் தனிமையை ஒரு சாபமாகக் கருதி அதனை வெறுக்கவே செய்கிறார்கள். ஆனால் பங்காளியோ, குடும்பமோ இல்லாத ஒருவர் சுதந்திரமாக வாழும் உரிமையைப் பெற்றிருப்பதால் அவரைப் பொறுத்தமட்டில் தனிமையை ஒரு வரமாகவே கருதுதல் வேண்டும். மணமான ஒரு மனிதரால் ஒருபோதும் செய்ய முடியாத மிகச்சிறந்த காரியங்களை மணமாகாத ஒருவரால் நிறைவாகச் செய்யமுடியும்.

பிறரால் பராமரிக்கப்படாத அல்லது பேணப்படாத பலரையும் பேணிப்பராமரிக்கும் அரிய பொறுப்பைக்கூட இவர்பெற நேரிடும். இத்தகையோர் கடவுளிடம் நெருங்கி வாழவும் அவருடன் அன்றாடம் உறவாடவும் முடியும். இது விண்ணரசை முன்னிட்டு ஒருவருக்கு விடுக்கப்படும் ஓர் இறையழைப்பு ஆகும். கிறிஸ்தவமான ஓர் இறையழைப்பு ஒருபோதுமே திருமணத்தையோ பாலுறவையோ கொச்சைப்படுத்துவதில்லை. சுய விருப்பத்தால் தேர்ந்து கொண்ட மணத்துறவு அன்பிலும் அன்பின் மூலமும் மட்டுமே செயற்படுத்த முடியும்.

– யூகேட் (கத்தோலிக்கத் திருச்சபையின் இளையோர் மறைக்கல்வி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *