Editorial

June 26, 2018

கடவுளுக்குக் கடன்கொடுப்போர்!

கடவுளுக்குக் கொடுப்பதும் கடவுளை நினைத்துக் கொடுப்பதும் பன்மடங்காகத் திரும்பக்கிடைக்கும். இருந்தும் என் நெஞ்சே நீ ஏன் கொடுக்கத் தயங்குகிறாய்?   தாகூரின் கீதாஞ்சலியில் குடிகாக்கும் ஒரு மன்னனைப் பற்றியும் ஓர் இரவலனைப் பற்றியும் ஒரு கதை […]
June 26, 2018

குறையேதுமில்லை சர்வேசா!

ஜப்பான் நாட்டுத் துறவிகள் ஒரு சிறிய மண்குடிசையில் தங்கியிருந்தனர். ஒரு மழைக்காலத்தில் பலத்த சூறைக்காற்று வீசவே, குடிசையில் பாதி இடிந்து விழுந்தது. மேற்கூரையும் காற்றில் பறந்தது. துறவிகளில் ஒருவர் இதைக்கண்டு ஆவேசமுற்றார். கடுங்கோபத்துடன் கடவுளிடம் முறையிட்டார்: […]
June 26, 2018

புகழ்பாக்கள் பூப்பதெப்படியோ?

பொர்ஹாம் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். அவர் ஒரு முறை ஒரு பெண்ணின் அழகான பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தார். பாடல் முடிந்ததும் அவர் தமது அதிருப்தியை வெளியிட்டார். அவரைப்போன்ற சிந்தனையாளரும் அனுபவம் வாய்ந்தவருமான அவரது நண்பர் இதைப்பற்றிக் கூறியது […]
June 26, 2018

இயேசு நிற்கிறார்!

ஸ்தேவானை அவரது கொலைஞர்கள் கல்லெறிந்தபோது இயேசு கடவுளின் வலப்பக்கம் நிற்பதைக் காண்பதாகக் கூறினார் புனித ஸ்தேவான். நான் இப்பகுதியை வாசித்த போது என்னையுமறியாமல் எனக்குள்ளே சில எண்ணங்கள் வெளிப்பட்டன. இயேசு கடவுளின் வலப்பக்கம் அமர்ந்திருக்கிறார் என்றே […]
June 26, 2018

இன்னா செய்தாரை ஒறுத்தல்

அன்னா என்னும் ஆலீஸ் அற்புத உலகைப் படைத்தது எப்படி எனக் கவனியுங்கள். நாமும் இதுபோன்ற அற்புத உலகங்களைப் படைப்போம் வாருங்கள்.   அவர் ஒர் ஆயர். அன்பின் மொத்த ரூபர். அவர் முங்கித் திளைத்த அன்புக் […]
June 26, 2018

இது ஒரு புனிதமான தப்பியோட்டம்

அகிலா என்னும் இளம்பெண் இயேசுவின் அருள்மொழிகளால் உந்தப்பட்டுத் தப்பியோடினாள். அவளது புனிதமான தப்பியோட்டத்தின் அரிய கதை நம்மையும் மெய்யான மகிழ்ச்சிக்குள் வருமாறு அழைக்கிறது.   மரியா சாந்தமாய் அமர்ந்து துணி தைக்கிறார். அது ஓர் அந்திமாலை […]
June 26, 2018

துன்பங்களில் துவளாதீர்கள்

அன்று அவளுக்குத் திருமண நாள். கிட்டத்தட்ட எல்லா ஏற்பாடுகளும் முடிவுற்றன. மிகக் கவனமாக ஜோடிக்கப்பட்ட கேக்கும் வந்தாயிற்று. அங்கே அணியறையில் சிலர் மணப்பெண்ணை அலங்கரித்துக் கொண்டிருந்தனர். அழகான பட்டுப் புடவையில் மணப்பெண் பார்க்க மிகவும் அம்சமாகத் […]
June 25, 2018

இருள் கடிந்த திருக்காட்சி!

எனக்கு அயலவனாகிய ஒரு சகோதரன் உண்டு. அவன் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். ஆயினும் கடவுள் மீது அவனுக்குத் துளியும் நம்பிக்கை இல்லை. கோவிலுக்கும் செல்ல விரும்பவில்லை. தேவநற்கருணை அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல. […]
June 25, 2018

காலம் என்ற அரிய பொக்கிஷம்

ஒரு புதுவீடு கட்ட விரும்பினேன்; அப்போது மழைநீர் சேகரிப்புத் தொட்டி, சூரிய ஆற்றல் பயன்பாடு, உயிரி சமையல் எரிவாயு போன்றவற்றையும் திட்டமிட்டேன். ஒரு துளி மழைநீரைக் கூட வீணாக்காமல் அறுவடை செய்து குடிநீராகவும் குளிநீராகவும் பயன்படுத்தி […]
June 25, 2018

மினி சொன்ன பதில்

நினையாப் பொழுதில் ஒரு தொலைபேசி அழைப்பு. எதிர்முனைக்காரியைச் சட்டெனப் புரியவில்லை. இருப்பினும் பிறகு புரிந்தது அவள் மினி என்று. மினியுடன் ஏற்பட்ட பழக்கம் தற்செயலான ஒன்று. ஒரு பேருந்தில் பயணித்த போது ஏற்பட்ட பழக்கம் அது. […]
June 20, 2018

குறிக்கோள் இல்லாத ஓட்டங்கள்

உசைன் போல்டு என்னும் தடகள வீரர் உலகத்தின் வேகமான ஓட்டப்பந்தயக்காரர் என்னும் பெருமைக்கு உரியவர். மின்னல் வேகத்தில் ஓடும் திறன்பெற்ற அவர் ‘லைட்னிங் போல்டு’ என்றும் அறியப்பட்டிருந்தார். வெறும் 9.58 நொடியில் நூறு மீட்டர் தூரத்தைக் […]
June 20, 2018

வானம் கொணர்ந்த உணவுப் பொட்டலம்!

புனித பிரான்சீஸ் அசீசியார் எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் காட்டுக்குச் சென்று மாலை முதல் காலைவரைத் தனித்திருந்து ஜெபிப்பது வழக்கம். இதைப் பார்த்த இன்னொரு சகோதரர் அவரிடம், ‘சுவாமி, உம்மால் எப்படி அங்கே தனித்திருக்க முடிகிறது?’ எனக் […]
June 26, 2018

தப்பிக்கப் பார்க்கிறீர்களா?

தேவ காருண்ணியத்தின் வேதபோதகி என அறியப்படும் புனித பவுஸ்தீனா ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தவர். மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்றவர். குடும்பத்தில் நிலவிய கொடிய வறுமையின் காரணத்தால் மேற்கொண்டு படிக்கமுடியவில்லை. இதனால் தமது […]
June 20, 2018

சீயன்னாவுக்குச் செல்லும் பாதை

ஒருநாள் அசீசியின் புனித பிரான்சீசும் இன்னொருவரான சகோதரர் மாசியோவும் ஒரு வழியாய் நடந்து போய்க்கொண்டிருந்தனர். பிரான்சீசை விட மாசியோ சற்று வேகமாக நடந்தார். இருவரும் ஒரு நாற்சந்தியை அடைந்தனர். அது, சீயன்னா, பிளாரன்ஸ், அரீசோ ஆகிய […]
May 3, 2018

கொடுக்கத் தவறிய ஒன்று

இந்த அந்நிய நாட்டில, எம் புள்ளைகளை வளக்கிறதுக்கு எத்தனூண்டு கஷ்டப்பட்டேன் தெரியுமா? ஊட்டுக்காரருக்கு வீட்டுமேல எந்த அக்கறையோ அங்கலாய்ப்போ இல்ல. இராப்பகலுண்ணு பாக்காம, கண்ணில வெண்ணைய வச்சிண்டு மாடா உழச்சு ஓடா தேஞ்சேன். புள்ளைங்க நன்னா […]
April 27, 2018

நானும்தான் அதிர்ஷ்டசாலி!

ஒருவன் இருந்தான். அவனுக்குத் திடீரென ஒருநாள் இருந்த வேலையும் பறிபோனது. மாற்றுவேலை தேடி ஊரெல்லாம் அலைந்தான். இறுதியில் ஒரு மிருககாட்சிச்சாலையை அடைந்து அங்குள்ள மேலதிகாரியைக் கண்டு அவரிடம் தனக்கு ஏதேனும் வேலைகிடைக்குமா என விசாரித்தான். அவர் […]
April 24, 2018

அங்கதமாயினும் இங்கிதம் காக்க !

புனித காமில்லஸ் தமது மருத்துவமனையின் தாழ்வாரங்களில் நடந்துகொண்டிருந்தார். அப்போது அங்கே தன்னுணர்வற்ற ஒரு மனிதன் தனது உடம்பில் ஒட்டுத்துணியும் இல்லாமல் ஏதோ சேட்டைகள் செய்து கொண்டிருந்தான். இதைப்பார்த்த மருத்துவமனை செவிலிப் பெண்கள் வாய்பொத்திக் கமுக்கமாய் சிரித்தனர். […]
April 17, 2018

அசத்தலின் பின்னணி

மைக்கிள் ஆஞ்சலோ என்னும் மாபெருங்கலைஞனைப் பற்றிக் கேள்விப்படாதோர் இருக்க முடியாது ‘பியாத்தா’ (தாய் மடி இயேசு), தாவீது போன்ற உலகப் புகழ்பெற்ற மகா சிற்பங்கள் அவருடையவை. சிற்பக்கலையில் அவர் சிறந்திருந்தாலும் ஓவியக்கலை தமக்குக் கைவராத கலை […]
April 14, 2018

சாந்தியாகோவின் நீதிமொழிகள்

இவ்வையகத்து உயிரினங்களில் மிகவும் பிரம்மாண்டமானது நீலத்திமிங்கலம். கலிபோர்ணியா மாகாணத்தில் உள்ள சாந்தியாகோ நகரின் ‘வாட்டர் வேள்டு’ என்னுமிடத்தில் தான் ‘கடல்யானை’ எனப்படும் நீலத்திமிங்கலத்தை நான் முதன்முதலாகப் பார்த்தேன். அதனுடைய பேருருவம் என்னை திகைப்பில் ஆழ்த்தியது. கூடவே […]
April 12, 2018

ரைன் ஆற்றுப் பாலத்தில்…

ஜெர்மனியில் உள்ள கொளோன் பட்டணத்தில் பாயும் ரைன் ஆற்றுப்பாலத்தில் சில விசித்திரமான காட்சிகளைக் காணலாம். அப்பாலத்தின் கைப்பிடிச்சுவர் இரும்புக் கம்பிகளால் ஆனது. அக்கம்பிகளில் ஜெர்மனி நாட்டு இளந்தம்பதியர் தங்கள் திருமணத்திற்குப்பின் முதல் வேலையாக ஒரு பூட்டுடன் […]
April 10, 2018

ஆனந்தம் இல்லாத ஆன்மீகம் எதற்காக?

அந்த இளம் துறவிக்கு ஆசிரம வாழ்க்கை வெறும் அவதிப்பட்ட வாழ்க்கையாய் மாறிவிட்டது. அவரது உள்ளத்தில் சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டது. சீ… எதற்காக இந்தக் கூறுகெட்ட வாழ்வுக்கு வந்து விட்டோம் என நெஞ்சம் வெதும்பியது. ஆசிரமத்தில் சேர்ந்தபோது […]
September 8, 2016

வெள்ளை மாளிகையும் விளக்கு மாடங்களும்…

வாஷிங்டன் மாநகரம் ! அங்கே ஷாலோம் திருவிழா நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்துகொண்டிருந்தன. விழாவுக்கு முன்தினம் ‘வெள்ளை மாளிகை’ (வைட் ஹவுஸ்) என்ற அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வமான கட்டிடத்தின் முன்பாக நடந்துசென்றுகொண்டிருந்தேன். அந்த மாளிகையின் கம்பீரப் […]
August 10, 2016

உறவாட யாருமில்லையா?

சில நாட்களுக்கு முன் பெங்களூருவில் உள்ள ஒரு செவிலியர் கல்லூரி மாணவியிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அவளது தந்தை இளமையிலேயே காலமாகி விட்டார். அம்மாவின் கடும் உழைப்பினால் வரும் சிறு ஊதியமே அவர்களின் மூலதனம். +2 […]
June 13, 2016

சொர்க்கங்கள் படைப்பது எப்படி?

ஃபெலிக்ஸ் சின்டேமில் என்பவர் ஒரு கல்லூரிப் பேராசிரியர். பிறரது மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவராயிருந்த அவர், திடீரென மூண்டெழுந்த சினத்தின் வெம்மையை அணைக்கத் தெரியாததால் ஒரு கொலைக்காரரும் சிறைக்கைதியுமாய் மாறினார். உரோமானிய மதுவியாபாரி ஒருவன் தம்முடைய மனைவியுடன் கொண்டிருந்த […]